பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த மழை- விவசாயிகள் மகிழ்ச்சி

பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை இரவு முழுவதும் பலத்த மழை பெய்ததால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை இரவு முழுவதும் பலத்த மழை பெய்ததால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
பெரம்பலூர், செட்டிக்குளம், வேப்பந்தட்டை, பாடாலூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் கடந்த ஒருசில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், கடந்த சில நாள்களாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், வயல் வெளிகள் ஈரப்பதத்துடன் காணப்படுவதால், கிணற்று நீரை கொண்டு விவசாயம் செய்த நிலங்களில் பூக்கள் உள்ளிட்ட பயிர்கள் சற்று வளரும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதேபோல, தொடர்ந்து மழை பெய்தால் மாவட்டம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு தீர்வதுடன், நிகழாண்டில் ஓரளவுக்கு விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். ஆனால், தற்போது பெய்து வரும் மழை நீர் ஏரி, குளங்களுக்கு செல்லும் வகையில் வாய்க்கால்கள் சீரமைக்கப்படாததால் கழிவு நீர் கால்வாய்களிலும், சாலையோரங்களிலும் வீணாகி வருகிறது. இதனால், மழை நீரை ஏரி, குளங்களில் சேமிக்கும் வகையில் மழை நீர் சேமிப்பு மேலாண்மைத் திட்டங்களை மேம்படுத்த வேண்டுமென பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் சனிக்கிழமை இரவு சுமார் 12 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை பலத்த இடியுடன் பரவலாக மழை பெய்தது. அதன்படி, செட்டிக்குளத்தில் 39 மி.மீ, பெரம்பலூரில் பலத்த இடியுடன் கூடிய 41 மி.மீ. மழை பெய்தது. வேப்பந்தட்டை மற்றும் தழுதாழை ஆகிய பகுதிகளில் தலா 26 மி.மீ, பாடாலூரில் 65 மி.மீ மழை பெய்துள்ளது. இதையடுத்து இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. இந்த மழையினால் பல இடங்களில் சுமார் 2 மணி நேரம் மின்சாரம் தடைபட்டிருந்தது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை பகலில் வெப்பம்  சற்று குறைந்து, குளிர்ந்த காற்று வீசியது. மாவட்டம் முழுவதும் பெய்து வரும் தொடர் மழையினால் விவசாயக் கிணறுகள், குளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், விவசாய நிலங்களை உழவு செய்யும் பணிகளையும் விவசாயிகள் தொடங்கியுள்ளனர். இதேபோல, தற்போது பெய்துவரும் மழையால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் வாய்ப்பு உள்ளதால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com