அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர இன்று நேரில் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர சனிக்கிழமை (ஆக. 19) நேரில் விண்ணப்பிக்கலாம் என பயிற்சி நிலைய முதல்வர் கே. உதயசங்கர் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர சனிக்கிழமை (ஆக. 19) நேரில் விண்ணப்பிக்கலாம் என பயிற்சி நிலைய முதல்வர் கே. உதயசங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பிட்டர், இயந்திர வேலையாள், மின்சார பணியாளர், வெல்டர், கடைசலர், மோட்டார் மெக்கானிக் உள்ளிட்ட பாடப் பிரிவுகள் உள்ளன.
இவற்றை நிரப்ப நேரடி சேர்க்கை நடைபெறுவதால், சனிக்கிழமை (ஆக. 19) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு மாணவ, மாணவிகள் நேரில் வந்து சேர்ந்துகொள்ளலாம்.
மேற்கண்ட பயிற்சிகளில் சேர விரும்பும் மாணவர்கள் 14 வயது முதல் 40 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். பெண்களுக்கு வயதுவரம்பு இல்லை. வெல்டர் பிரிவில் சேர 8 ஆம் வகுப்பிலும், சோலார் பிரிவில் சேர 10 ஆம் வகுப்பிலும் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு மடிக்கணினி, சீருடை, காலணி, புத்தகங்கள், மிதிவண்டி, மாதம் ரூ. 500 உதவித்தொகை மற்றும் வரைபட கருவிகள் தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு, முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், பெரம்பலூர் என்ற முகவரியிலோ அல்லது 86102 17671 என்ற எண்ணிலோ தொடர்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com