தமிழகத்தில் பி.டி. ரக பருத்தியை தடை செய்ய வேண்டும்

தமிழகத்தில் பி.டி. ரக பருத்தியைத் தடை செய்ய வேண்டும் என்றார் நிலைத்த, நீடித்த வேளாண்மைக்கான தேசிய கூட்டமைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் கவிதா குருகண்டி.

தமிழகத்தில் பி.டி. ரக பருத்தியைத் தடை செய்ய வேண்டும் என்றார் நிலைத்த, நீடித்த வேளாண்மைக்கான தேசிய கூட்டமைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் கவிதா குருகண்டி.
பெரம்பலூர் மாவட்டத்தில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களது உயிரிழப்புக் காரணமான பூச்சிக்கொல்லி மருந்துகளின் விவரங்களை செவ்வாய்க்கிழமை கேட்டறிந்த அவர் அளித்த பேட்டி:
அகில இந்திய அளவில் உள்ள ஆஷா, சுராஜ் அபியான், பி.யூ.சி.எல். மற்றும் இயற்கை வேளாண் இயக்கம், நாட்டுப் பருத்திகளுக்கான இயக்கங்கள் இணைந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கும்போது உயிரிழந்த விவசாயிகளின் வீடுகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளோம்.
உயிரிழந்த விவசாயிகளின் பிரச்னைகளை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் கவனத்தில் கொள்ளவில்லை என்பது வேதனையளிக்கிறது. விஏஓ  முதல் எந்த அதிகாரிகளும் விவசாயிகளின் சாவுக்கு என்ன காரணம் எனக் கேட்டறியவில்லை. 
வெளிநாட்டில் தடை செய்யப்பட்ட பூச்சி மருந்துகள் இந்தியாவில் விற்கப்படுகின்றன. ஆனால், மத்திய அரசு எந்தத் தடையுத்தரவும் பிறப்பிக்கவில்லை. பி.டி. ரகப் பருத்தியில் பூச்சிகளின் தாக்குதல் இருக்காது என்று விவசாயிகளிடம் தெரிவித்து விற்கப்படுகிறது. ஆனால், இந்த பருத்தி செடிகளில் அதிகளவில் பூச்சி காணப்படுகிறது. இவற்றை கட்டுப்படுத்த புதிய, புதிய மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்தி வருவதால் உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன. தற்போது வளர்ந்துள்ள செடிகள் அனைத்தும் சுமார் 5 அடி உயரத்துக்கு உள்ளதால், மருந்து தெளிக்கும்போது விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
அகில இந்திய அளவில் 
மராட்டியம், தெ    லங்கானாவிலும் இதுபோன்ற பிரச்னைகளால் விவசாயிகள் உயிரிழக்கின்றனர். இந்த பிரச்னைகளை அகில இந்திய அளவில் கொண்டுசெல்ல முயன்று வருகிறோம். இந்த மருந்துகளைத் தடை செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்க  உள்ளோம். மேலும், கேரளத்தில் தடை செய்யப்பட்டதை போல தமிழகத்திலும் பி.டி. ரக பருத்திகளை தடை செய்ய வேண்டும். அதேபோல, பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு மாற்றாக, இயற்கை உரங்களைப் பயன்படுத்த அரசு ஊக்குவிக்க வேண்டும். 
பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு  ரூ. 5 லட்சமும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சமும் வழங்க வேண்டும் என்றார் அவர்.
பாதுகாப்பான, உணவுக்கான கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அனந்து, ஸ்வராஜ் அபியான் அமைப்பின் மாநிலக் குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், இயற்கை வேளாண் அமைப்பினர் ரமேசு கருப்பையா, சரவணன், பார்த்தசாரதி, சுவாமிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com