செட்டிக்குளத்தில் விழிப்புணர்வுப் பேரணி

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம், இளையோர் செஞ்சிலுவைச் சங்கம்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம், இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் எய்ட்ஸ், டெங்கு மற்றும் மனிதநேய விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் பி. நாகமணி தலைமை வகித்தார். இந்திய செஞ்சிலுவைச் சங்க மாவட்ட கெளரவச் செயலர் ந. ஜெயராமன் தொடக்கி வைத்தார். மாவட்ட கெளரவப் பொருளாளரும், மாவட்ட
கன்வீனருமான வெ. ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
பேரணியானது, பள்ளி வளாகத்தில் தொடங்கி செட்டிக்குளம் பத்திரப் பதிவு அலுவலகம், அஞ்சல் அலுவலக வீதி, கடைவீதி, தெற்கு வீதி மற்றும் நகரின் பிரதான தெருக்கள் வழியாக சென்று மீண்டும்  
பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு வாசகங்களை முழக்கமிட்டு, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். 
தொடர்ந்து நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வுக் கருத்தரங்கில், எய்ட்ஸ் ஒழிப்பு உறுதிமொழியேற்கப்பட்டது. மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்ட மாவட்ட மேற்பார்வையாளர் சுமதி, மாநில கருத்தாளர்
சி. பத்மாவதி ஆகியோர் எய்ட்ஸ் நோய் பரவும் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கினர். பின்னர், கட்டுரை, பேச்சுப்போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்
வழங்கப்பட்டது. 
நிகழ்ச்சிகளில், மண்டல அலுவலர்கள் மு. நவிராஜ், ஆர். செல்வக்குமார், ம. ஜோதிவேல், மாவட்ட சாரண உதவிச் செயலர் தனபால், மாவட்ட சாரணிய அமைப்பு ஆணையர் சரோஜா, பள்ளி பசுமைப்படை
ஒருங்கிணைப்பாளர்  பாஸ்கர், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ப. ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  உதவித் தலைமை ஆசிரியர் செ. மணி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com