குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 பேர் கைது

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை இரவு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை இரவு சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், ஆங்கியம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் ராஜேஷ் (29). இவர், பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர், மருவத்தூர் ஆகிய காவல் நிலையங்களுக்குள்பட்ட கிராமங்களில் தொடர்ந்து நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். இவர் மீது மருவத்தூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் பாடாலூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையிலான போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ராஜேஷை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
 இதேபோல், திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தாத்தயங்கார்பேட்டையைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் மனோஜ்குமார் (30). இவர், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் வடக்கலூர் கிராமத்தில் தங்கி, லப்பைக்குடிகாட்டில் வியாபாரம் செய்து வந்தார். அப்போது, நகைபறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், குன்னம் காவல் ஆய்வாளர் சிவசுப்ரமணியன் தலைமையிலான போலீஸார், மனோஜ்குமாரை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். 
 இந்நிலையில், மேற்கண்ட இருவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தார். அந்த பரிந்துரையை மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா ஏற்று உத்தரவிட்டார். இதையடுத்து, அந்த உத்தரவின் நகல் சிறையில் உள்ள ராஜேஷ், மனோஜ்குமார் ஆகியோரிடம் சிறைத்துறை அதிகாரிகள் வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com