பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்

பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் 19 பேர் பங்கேற்றனர்.

பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் 19 பேர் பங்கேற்றனர்.
கடந்த பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஊக்கத் தொகையை வழங்க வேண்டும். ஊழியர்களுக்கான மருத்துவப் படியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை கடந்த 4 ஆண்டுகளாக பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கம் வலியுறுத்தி வருகிறது. 
இதையடுத்து, 2012 ஜூன். 12 முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அப்போது பேச்சுவார்த்தை மேற்கொண்ட மத்திய அரசு மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சக அதிகாரிகள் விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர்.  இதனால், வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. 
இந்நிலையில், ஓராண்டாகியும் கோரிக்கை குறித்த எவ்வித பரிசீலனையும் இல்லாததால் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தது. அதன்படி, கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. பெரம்பலூரில், மாவட்ட கிளைச் செயலர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 19 ஊழியர்கள் பங்கேற்றனர்.
அரியலூரில்... பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினர்.
3 ஆவது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். பி.எஸ்.என்.எல். கோபுரங்களை தனியாருக்கு கொடுக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல் அனைத்துத் தொழிற்சங்கம் மற்றும் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற  போராட்டத்தில்  ஊழியர்கள் மட்டுமின்றி அதிகாரிகளும் கலந்து கொண்டதால் கல்லூரிச் சாலையிலுள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் திறக்கப்படவில்லை. 
இதனால் பி.எஸ்.என்.எல். சேவை பாதிக்கப்பட்டது. வாடிக்கையாளர் சேவை மையங்களும் மூடப்பட்டிருந்ததால் தொலைபேசி கட்டணம், செல்லிடப்பேசி கட்டணம் செலுத்த முடியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com