பெரம்பலூரில் மாநில ரோல் பால் போட்டிகள் தொடக்கம்

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ரோலர் ஸ்கேட்டிங் மைதானத்தில், மாநில அளவிலான 5-வது சப் ஜூனியர் ரோல் பால் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கியது.

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ரோலர் ஸ்கேட்டிங் மைதானத்தில், மாநில அளவிலான 5-வது சப் ஜூனியர் ரோல் பால் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கியது.
தொடக்க விழாவுக்கு, ரோல் பால் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம். ஆவன் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்டத் திட்டக்குழுத் தலைவர் டி. ஸ்ரீதர் முன்னிலை வகித்தார்.
போட்டிகளை, பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன் தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாநிலச் செயலர் எம்.பி. சுப்ரமணியன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எம். ராமசுப்ரமணியராஜா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் டி. விஜயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சங்கத்துணை தலைவர் எல். சந்திரமோகன் பால்ராஜ் வரவேற்றார். மாவட்டச் செயலர் எம். ஆனந்த் நன்றி கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 16) வரை நடைபெறும் இப்போட்டிகளில் மதுரை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தர்மபுரி, ஈரோடு, கடலூர், மதுரை, தேனி, திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களைச் சேர்ந்த 14 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.
இதில், 18 ஆண்கள் அணியில் 210 பேரும், 10 பெண்கள் அணியில் 100 மாணவிகளும் பங்கேற்றுள்ளனர். இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் ஞாயிற்றுக்கிழமை மாலை வழங்கப்படுகிறது. மேலும், இப்போட்டிகளில் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகள் செப்டம்பர் மாதம் கோவாவில் நடைபெறும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com