பயிர் காப்பீடு திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

காரீப் பருவத்தில் 2017- 18 ஆம் ஆண்டுக்கான பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தங்களது பயிர்களை

காரீப் பருவத்தில் 2017- 18 ஆம் ஆண்டுக்கான பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தங்களது பயிர்களை பயிர் காப்பீடு செய்து பயன்பெற அழைப்பு விடுத்துள்ளார்  ஆட்சியர் வே. சாந்தா.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் 2017- 18 ஆம் ஆண்டில் காரீப் பருவத்தில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில், இந்த மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் நெல்- 1 குறுவை,  மக்காச்சோளம்,  பருத்தி,  உளுந்து,  துவரை, நிலக்கடலை, சோளம், கம்பு, எள் மற்றும் தோட்டக்கலை பயிர்களான வாழை, மரவள்ளி, மஞ்சள், வெங்காயம் ஆகிய பயிர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் பயிர் காப்பீடு தொகையை வணிக வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக செலுத்தலாம். பயிர்க்கடன் மற்றும் விவசாய நகைக் கடன் பெறும் விவசாயிகளிடம் பிரீமியத் தொகை கட்டாயமாகவும்,  கடன்பெறாத விவசாயிகளிடம் விருப்பத்தின் பேரில்  வசூலிக்கப்படும். விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை நகல்,  கணினி சிட்டா,  அடங்கல்,  வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகலுடன் கைப்பேசி எண்ணையும் பதிவுசெய்ய வேண்டும்.  
31.7.2017-க்குள் ஏக்கருக்கு நெல்- 1 குறுவைக்கு ரூ. 535,  15.8.2017-க்குள் மக்காச்சோளத்துக்கு ரூ. 368,  பருத்திக்கு ரூ. 1,128,  உளுந்துக்கு ரூ. 260, துவரைக்கு ரூ. 260,  நிலக்கடலைக்கு ரூ. 453,  சோளத்துக்கு ரூ. 187,  கம்புக்கு ரூ. 189,  எள்ளுக்கு ரூ. 218 செலுத்த வேண்டும்.
30.9.2017 ஆம் தேதிக்குள் தோட்டக்கலைத் துறை பயிர்களில் ஏக்கருக்கு வாழை ரூ. 2,535, மரவள்ளிக்கு ரூ. 1,150, மஞ்சளுக்கு ரூ. 2,750, சின்ன வெங்காயத்துக்கு ரூ. 1,425 பிரீமியம் தொகை செலுத்த வேண்டும்.
நிகழாண்டு காரீப் பருவத்தில் சாகுபடி செய்யப்பட உள்ள மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 152 வருவாய் கிராமங்களுக்கும் அறிக்கை பெறப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளே முன்வந்து தாங்கள் பயிரிடும் பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.
நெல் - 1 குறுவை, உளுந்து, துவரை, நிலக்கடலை, சோளம், கம்பு, எள் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கான அறிக்கை செய்யப்பட்ட வருவாய் கிராமங்களின் விவரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் அலுவலகத்தில் தொடர்புகொண்டு பயன்பெறலாம். மேலும், விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்க சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள், துணை வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள், உதவி தொழில்நுட்ப மேலாளர்களை அணுகலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com