மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்: 212 பேர் பங்கேற்பு

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வேப்பந்தட்டை வட்டார வள மையம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனுடைய

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வேப்பந்தட்டை வட்டார வள மையம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் 212 பேர் பங்கேற்றனர்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அனைவருக்கும் கல்வி இயக்கம் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டத்தின் கீழ், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த 6 முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு, வெங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை,  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்மொழிதேவி தொடக்கி வைத்தார்.
இதில், மன வளர்ச்சி குன்றிய 116 குழந்தைகளும், கை, கால் பாதிக்கப்பட்ட 26 குழந்தைகளும், செவித்திறன் பாதிப்படைந்த 18 குழந்தைகளும், கண் பார்வை குறையுடைய 52 குழந்தைகளும் என 212 மாற்றுத்திறனுடைய குழந்தைகள் பங்கேற்றனர்.
மனநலன் மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி, எலும்பு முறிவு மருத்துவர் செந்தில்குமார், காது மூக்கு தொண்டை மருத்துவர் தேவேந்திரன், கண் மருத்துவர் ஆனந்தமூர்த்தி, பொது நல மருத்துவர் சுதா, கண் பரிசோதகர் செல்லப்பன், செவித்திறன் பரிசோதகர் செந்தில்,
 முட நீக்கியல் வல்லுநர்
முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர் மாற்றுத்திறனுடைய குழந்தைகளை பரிசோதித்து, 6 குழந்தைகளுக்கு சக்கர நாற்காலிகள், 7 குழந்தைகளுக்கு நடைப்பயிற்சி சாதனம், 6 குழந்தைகளுக்கு கார்னர் சீட்டு, 10 குழந்தைகளுக்கு முடநீக்கியல் சாதனம், 6 மனவளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகளுக்கு கற்றல் கற்பித்தல் உபகரணங்கள், 13 குழந்தைகளுக்கு கண் கண்ணாடிகள், 2 குழந்தைகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலி என மொத்தம் 49 குழந்தைகள் உபகரணங்கள் பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், 13 மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.  
முகாமில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ராமகிருஷ்ணன், அனைவருக்கும் கல்வித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாலதி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ)  ரா. ரமேஷ், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஜோதிலட்சுமி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com