மோட்டார் வாகன மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தல்

மத்திய அரசின் மோட்டார் வாகன மசோதாவை திரும்ப பெற வேண்டுமென,  வாகன ஓட்டுநர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மத்திய அரசின் மோட்டார் வாகன மசோதாவை திரும்ப பெற வேண்டுமென,  வாகன ஓட்டுநர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், 3 பிளஸ் 1 ஆட்டோ மற்றும் அனைத்து வகையான வாகன ஓட்டுநர்கள், தொழிலாளர்கள் சங்க பேரவைக் கூட்டம், மாவட்டத் தலைவர் பி. பிரகாஷ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட செயலர் எ. ரெங்கநாதன் செயல் அறிக்கையும், பொருளாளர் சி. கனகராஜ் வரவு, செலவு அறிக்கையும் வாசித்தனர்.
கூட்டத்தில்,  பெரம்பலூர் மாவட்டத்தில் வீடு இல்லாத ஆட்டோ ஓட்டும் தொழிலாளிகளுக்கு மத்திய, மாநில அரசு அறிவித்த நிதியுதவியில் இருந்து இடம் வழங்கி, வீட்டு வசதி வாரியம் மூலம் வீடு கட்டித்தர வேண்டும். எளம்பலூர் ஊராட்சிக்குள்பட்ட எம்.ஜி.ஆர் நகரில் சாலை வசதி, கழிப்பிட வசதி, பகுதிநேர நியாயவிலைக் கடை அமைக்க  ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அங்குள்ள அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.
பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள திருநகர் பகுதியில் 40- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆட்டோ நிறுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ள நிலையில்,  தற்போது அந்த இடத்தை ஆக்கிரமித்து வணிக வளாகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி ஆட்டோ நிறுத்த வழிவகை செய்ய வேண்டும். மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், சி.ஐ.டி.யு பொறுப்பாளர்கள் ஆர். சிற்றம்பலம், ஆர்.  அழகர்சாமி,  பி.  துரைசாமி,  ஆர். ராஜகுமாரன், எ. கணேசன், பி. ரெங்கராஜ், எஸ். அகஸ்டின், பி. முத்துசாமி, கே. மணிமேகலை, எம். செல்லதுரை, கல்யாணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாநிலக்குழு உறுப்பினர் சி. சண்முகம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com