வேப்பந்தட்டை கலை கல்லூரியில் கவிதை, கட்டுரை போட்டிகள்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது.
 முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ஆகஸ்ட் 5 ஆம் தேதி பெரம்பலூரில் நடைபெற உள்ளது. இவ்விழாவை, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவியம், யோகாசனம் உள்ளிட்ட போட்டிகள், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், பேரூராட்சிகள் மூலமாக தூய்மைப் பணிகள், கலை இலக்கியப் போட்டிகள், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை மூலம் டேக்வாண்டோ, சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளுக்கான செயல்முறை விளக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஆக. 4 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இதன்படி,   வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளிடையே பல்வேறு போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
இதில், தமிழ் பேச்சுப் போட்டியில் தமிழ்த்துறை 2 ஆம் ஆண்டு மாணவி ஆஷா, 3 ஆம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி ரூபினா, 2 ஆம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவர் பாண்டியன் ஆகியோர் சிறப்பிடம் பெற்றனர்.
ஆங்கில பேச்சுப் போட்டியில் 2 ஆம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவர் ராமச்சந்திரன், கணினி பிரிவு மாணவி ரேஷ்மா, 3 ஆம் ஆண்டு ஆங்கில பிரிவு மாணவி ரூபினா, ஓவியப் போட்டியில் முதலாமாண்டு கணினிப் பிரிவு மாணவி கற்பகவள்ளி, 2 ஆம் ஆண்டு மாணவி கனிமொழி, முதலாமாண்டு தமிழ்த்துறை மாணவி ஓவியா ஆகியோர் சிறப்பிடம் பெற்றனர்.
தமிழ் கவிதைப் போட்டியில் ஆங்கிலத்துறை 3 ஆம் ஆண்டு மாணவி நர்மதா, கனிணிப் பிரிவு மாணவி சந்தியா, மாணவர் பாண்டியன், யோகா போட்டியில் தமிழ்த்துறை 3 ஆம் ஆண்டு மாணவர் உத்திரக்குமார், 2 ஆம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவர்கள் பாண்டியன், முத்தமிழ்செல்வன் ஆகியோர் சிறப்பிடம் பெற்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார் கல்லூரி முதல்வர் முனைவர் மணிமேகலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com