ஜேக்டோ, ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ஊதியக்குழு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட 3 ஆம்ச கோரிக்கையை வலியுறுத்தி, பெரம்பலூரில் ஜேக்டோ

ஊதியக்குழு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட 3 ஆம்ச கோரிக்கையை வலியுறுத்தி, பெரம்பலூரில் ஜேக்டோ, ஜியோ கூட்டமைப்பினர் கவன ஈர்ப்பு ஈர்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் கோ. ராமமூர்த்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கி.  ஆளவந்தார்,
தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் ஒய்.ஆர். செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
கூட்டமைப்பு நிர்வாகிகள் இ. ராஜேந்திரன், சு.  மகாராஜன், த.  ராஜேந்திரன், பி. தயாளன், ஜெ. பிரபாகரன், ஆ. தெய்வராசா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
ஊதியக் குழு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். ஊதிய முரண்களை களைய வேண்டும். ஊதியக்குழுபரிந்துரை அமல்படுத்தும் வரை, 1.1.2016 முதல் 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ச. அருள்ஜோதி, சி. சுசிகுமார், பெ. ஜெயராமன், பா.  சிவக்குமார், பொ. ரவிச்சந்திரன், மு. விஜயலட்சுமி, எம்.எஸ். ராஜேந்திரன், ஆர். ராஜ்குமார், ஜி. அறிவேல், எஸ். பெரியசாமி உள்பட 1,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  அரியலூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே ஜேக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 கூட்டமைப்பின் மாவட்டத்  மாவட்டத் தொடர்பாளர்கள் ஆ.ந முருகேசன், கோ. பாலசுப்ரமணியன், க. பஞ்சாபிகேசன், எம். ரெங்கசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com