பெண்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை வலியுறுத்திபெரம்பலூரில் கையெழுத்து இயக்கம் தொடக்கம்

உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூரில் கையெழுத்து இயக்க பெருந்திரள் முறையீடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூரில் கையெழுத்து இயக்க பெருந்திரள் முறையீடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலர் கலையரசி தலைமை வகித்தார். அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் சுமதி, தையல்நாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிஐடியூ மாவட்ட செயலர் அழகர்சாமி, மாவட்ட நிர்வாகிகள் கணேசன், ராஜகுமாரன், முத்துசாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில், உழைக்கும் பெண்கள் அனைவருக்கும் வேலையை உத்தரவாதப்படுத்த உரிய நிதி ஒதுக்கீடு வேண்டும். குறைந்த பட்ச ஊதியம், சமூக பாதுகாப்பு பலன், சங்க உரிமை ஆகியவற்றை உறுதிபடுத்த வேண்டும். அங்கன்வாடி மையங்களை குழந்தைகள் காப்பகமாக மாற்ற வேண்டும். உணவு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய நிதி ஒதுக்க வேண்டும். மாவட்டம்தோறும் புகார் குழு அமைக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்புச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தொடர்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியர் வே. சாந்தாவிடம் அளித்தனர்.
இதில், சங்க பொறுப்பாளர்கள் ஆறுமுகம், கல்யாணி, ரெங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com