மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் தன்னார்வலர்களாக சேர அழைப்பு

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் தன்னார்வலர்களாக சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் தன்னார்வலர்களாக சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியுமான எஸ். பாலராஜமாணிக்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூரில் இயங்கி வரும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் 2017- 2018 ஆம் ஆண்டுக்குரிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவால் ஒதுக்கப்படும் பணிகளை மேற்கொள்ள தன்னார்வலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் குடியிருப்பவராக, 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு குற்றத்திற்காக விசாரணையை எதிர்கொள்பவராக இருக்கக் கூடாது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அவர்களுக்கு, மதிப்பூதியமாக நாள் ஒன்றுக்கு ரூ. 250 வழங்கப்படும்.
இத்தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒரு வெள்ளைத்தாளில் தங்களுடைய முழு விவரங்களையும் எழுதி ஜூன் 30 ஆம் தேதிக்குள் தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, நீதிமன்ற வளாகம், பெரம்பலூர் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com