தனிநபர் இல்லக் கழிப்பறை விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூரில், தனிநபர் இல்லக் கழிப்பறைகள் அமைப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூரில், தனிநபர் இல்லக் கழிப்பறைகள் அமைப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
எளம்பலூர் கிராமத்தில் மகளிர் திட்டம், புது வாழ்வுத் திட்ட களப் பணியாளர்கள், ஸ்கோப் தொண்டு நிறுவனம் மற்றும் பன்னாட்டு குழந்தைகள் நல குழுமத்தின் சார்பில், திறந்தவெளியில் மலம் கழிப்பதால் எற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன் பேசியது:
ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக முன்னாள் முதல்வரால் மகளிர் சுகாதார வளாகங்கள் எற்படுத்தப்பட்டன. இதன்காரணமாக தனிநபர் இல்லக் கழிப்பறைகள் அமைக்க இயலாத ஏழை, எளிய மக்களும் மகளிர் சுகாதார வளாகங்களைப் பயன்படுத்தி வந்தனர். கழிப்பறைகளின் பயன்பாடுகளை கிராம மக்களிடையே அதிகப்படுத்தும் நோக்கில், தற்போது அனைத்துப் பகுதிகளிலும் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் ரூ. 12,000 மதிப்பில் அமைக்கப்பட்டு வருகின்றன.
எனவே, கிராம மக்கள் அனைவரும் தனிநபர் இல்லக் கழிப்பறைகளை முறையாக பயன்படுத்திக்கொண்டு, திறந்தவெளியில் மலம் கழிப்பதால் உண்டாகும் பல்வேறு நோய்களில் இலிருந்து தங்களையும், தங்களது குடும்பத்தினரையும் பாதுகாத்து நலமான வாழ்வு வாழவேண்டும் என்றார்.
முன்னதாக, சட்டப்பேரவை உறுப்பினர் தலைமையில் திறந்தவெளியில் மலம் கழிக்கமாட்டோம், தனிநபர் இல்லக் கழிப்பறைகளை முறையாகப் பயன்படுத்துவோம் என கிராம மக்கள் உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவாசகம், தூய்மை பாரத இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பூபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com