தொடர் விபத்தை தடுக்க நடவடிக்கை கோரி மறியல்

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் அருகே தொடர்ந்து நேரிடும் சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, கிராம மக்கள் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் அருகே தொடர்ந்து நேரிடும் சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, கிராம மக்கள் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் அருகேயுள்ள விஜயகோபாலபுரம் கிராமத்தில் தொடர்ந்து நேரும் சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அங்குள்ள தனியார் டயர் தொழிற்சாலைக்கு சென்ற லாரியும், கரும்பு டிராக்டரும் மோதி விபத்து நேரும் நிலை ஏற்பட்டது.
இதையறிந்த, விஜயகோபாலபுரம் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து நேரிடும் சாலை விபத்தை தடுக்க மேம்பாலம் அமைக்கவும், தாற்காலிகமாக அப்பகுதியில் சாலை தடுப்புகள் அமைக்கவும் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடாலூர் போலீஸார் அங்கு சென்று திங்கள்கிழமை மாலைக்குள் சாலை தடுப்புகள் அமைக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட மக்கள், நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படும் எனக்கூறி, சாலை மறியலை கைவிட்டு கலைந்துசென்றனர். பொதுமக்களின் திடீர் சாலை மறியல் போராட்டத்தால், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com