இன்றுமுதல் அடிப்படை நீச்சல் பயிற்சி

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் வெள்ளிக்கிழமை (மே 19) முதல் பெரம்பலூர் மாவட்ட மாணவ,

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் வெள்ளிக்கிழமை (மே 19) முதல் பெரம்பலூர் மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு அடிப்படை நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராமசுப்பிரமணிய ராஜா வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 3 ஆம் கட்ட நீச்சல் பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை தவிர அனைத்து நாள்களும் நடைபெற உள்ளன.
வெள்ளிக்கிழமை (மே 19) முதல் ஜூன் 1 வரை காலை 7 மணி இரவு 7 மணி வரை சிறந்த நீச்சல் பயிற்றுநரை கொண்டு 12 நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, கோடை விடுமுறையில் மாணவ, மாணவிகள் அனைவரும் அடிப்படை நீச்சல் பயிற்சி கற்று, உடல்திறனை மேம்படுத்தி சிறந்த நீச்சல் வீரர், வீராங்கனைகளாக உருவாகவும், தேசிய, சர்வதேச நீச்சல் போட்டிகளில் வெற்றி பெறவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு நீச்சல் பயிற்றுநர் 99656-39606, 82201-13260,மாவட்ட விளையாட்டு அலுவலகம்- 82209-99499.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com