கலைப் பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்

பெரம்பலூரில் கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற கோடைகால பயிற்சி முகாமில் பங்கேற்ற 159 சிறுவர், சிறுமியருக்கு வெள்ளிக்கிழமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பெரம்பலூரில் கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற கோடைகால பயிற்சி முகாமில் பங்கேற்ற 159 சிறுவர், சிறுமியருக்கு வெள்ளிக்கிழமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறை சார்பில், ஜவகர் சிறுவர் மன்றம் வெங்கடேசபுரத்தில் உள்ள அரசு இசைப் பள்ளியில் செயல்பட்டு வருகிறது. ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், வாரவிடுமுறை நாள்களில் மாணவ, மாணவிகளுக்கு நுண்கலை பயிற்சி இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது.  
மேலும், ஒவ்வோர் ஆண்டும் கோடைகாலத்தில் நுண்கலை பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, நிகழாண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் கலைப் பண்பாட்டுத் துறை துணை இயக்குநர் குணசேகரன் அறிவுரையின் பேரில், பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த 10 நாள்கள் நடைபெற்றது.
நாள்தோறும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குரலிசை, நடனம், ஓவியம், சிலம்பம் ஆகிய நுண்கலைகளில் 5 வயது முதல் 16 வயதுக்குள்பட்ட சிறுவர், சிறுமியருக்கு, பரத ஆசிரியை அன்புசெல்வி, ஓவிய பயிற்றுநர் ஹேமாஸ்ரீ, குரலிசை ஆசிரியர் இலக்கியா, சிலம்பம் பயிற்றுநர் முருகேசன் ஆகியோரால் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி முகாமில் 159 சிறுவர், சிறுமியர் பங்கேற்றனர். பயிற்சி முகாம் நிறைவு விழா அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை திருச்சி துணை இயக்குநர் டாக்டர் மனோகரன், பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினார். இதில், பயிற்றுநர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் நடராஜன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com