பெரம்பலூர்- மானாமதுரை சாலையில் மரக்கன்றுகள் நட வலியுறுத்தல்

பெரம்பலூர்- மானாமதுரை சாலை அகலப்படுத்தும் பணிக்காக பல ஆண்டுகளாக பராமரிக்கப்பட்ட வந்த 200-க்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றப்பட்டன. இதனால் மழை வளம் குறைந்து, வெப்பம் அதிகரித்து

பெரம்பலூர்- மானாமதுரை சாலை அகலப்படுத்தும் பணிக்காக பல ஆண்டுகளாக பராமரிக்கப்பட்ட வந்த 200-க்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றப்பட்டன. இதனால் மழை வளம் குறைந்து, வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. சாலையோர மரங்கள் அகற்றப்பட்டுள்ளதால் இரு சக்கர வாகன ஓட்டுநர்களும், பாதசாரிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, சாலை விரிவாக்கப்ப பணிகளின் போது அகற்றப்பட்ட மரங்களுக்கு பதிலாக சாலையின் இருபுறமும் நரக்கன்றுகள் நட்டு வைத்து, அவற்றை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் பி. பாஸ்கரனிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் உணவகங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் பிளாஸ்டிக் பொருள்களை தவிர்த்து, வாழை இலைகளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட இளைஞர்கள் வாழை இலைகளுடன் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான உணவகங்களில் வாழை இலைகளுக்கு பதிலாக, பிளாஸ்டிக் பொருள்களால் தயாரிக்கப்பட்ட இலைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதுபோன்ற பொருள்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கும், மண்ணுக்கும், மனிதனுக்கும் தீங்கு ஏற்படுகிறது. மேலும், உணவகங்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் இலையால் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த இலைகளை குப்பை தொட்டிகள், கழிவுநீர் கால்வாய்களில் கொட்டினால் மண் வளத்திற்கும் தீங்கு ஏற்படுகிறது. இதை உட்கொள்ளும் கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, அனைத்து உணவகங்களிலும் பிளாஸ்டிக் பொருளால் தயாரிக்கப்பட்ட பொருள்களின் பயன்பாடுகளை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com