பெரம்பலூர், அரியலூரில் சட்ட விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், சட்ட உதவி விழிப்புணர்வு மற்றும் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், சட்ட உதவி விழிப்புணர்வு மற்றும் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
சட்ட சேவைகள் தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் தொடங்கிய சட்ட உதவி  மற்றும் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை வட்டார போக்குவரத்து அலுவலர் க. அறிவழகன் முன்னிலையில், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி எஸ். பால ராஜமாணிக்கம் கொடியசைத்து தொடக்கி வைத்தார். இந்தப் பேரணியானது வெங்கடேசபுரம், சங்குப் பேட்டை, கடை வீதி வழியாகச் சென்று பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
இதில், மகளிர் நீதிமன்ர நீதிபதி விஜயகாந்த், தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவி பாஸ்கர், சார்பு நீதிமன்ற நீதிபதி வினோதா, வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் இ. வள்ளுவன்நம்பி, வழக்குரைஞர்  அசோசியேஷன் சங்கச் செயலர் சுப்ரமணியன், துணை கண்காணிப்பாளர் கார்த்திக், சட்டப் பணிகள் ஆணைக்குழு அலுவலர் வெள்ளைச்சாமி, வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் செல்வராஜ், பெரியாசாமி, வழக்குரைஞர்கள் சிவராமன், மணிவண்ணன், கணேசன், பாலமுருகன் உள்பட 250- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அரியலூரில்...: தேசிய சட்டப்பணிகள் தின விழாவை முன்னிட்டு, அரியலூர் சந்தை சாலையில், சட்ட விழிப்புணர்வு கூட்டப் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சுமதி தலைமை வகித்து பேசினார். அப்போது தேசிய சட்டப் பணிகள் தினத்தை முன்னிட்டு, நீதிமன்ற வளாகத்தில் வரும் சனிக்கிழமை நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அவர். பின்னர் அவர்,பொதுமக்களிடம் சட்ட விழிப்புணர்வு குறித்து துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தார்.
நிகழ்ச்சியில், தலைமை குற்றவியில் நீதித்துறை நடுவர் ஏ.எஸ். ரவி, குற்றவியில் நீதித்துறை நடுவர் மகலாட்சுமி, சார்பு நீதிபதி பி. சரவணன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி எம். மாணிக்கம், வழக்குரைஞர் சங்கத் தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com