100 விவசாயிகளுக்கு பாதுகாப்பு உடைகள்,உபகரணங்கள்

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 100 விவசாயிகளுக்கு பூச்சி மருந்து தெளிக்கும் போது அணிந்து கொள்ளும் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் உடைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 100 விவசாயிகளுக்கு பூச்சி மருந்து தெளிக்கும் போது அணிந்து கொள்ளும் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் உடைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
வாலிகண்டபும் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் மாவட்ட வேளாண்மைத்துறை மூலம், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 100 விவசாயிகளுக்கு பாதுகாப்புஉடைகள், உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா வழங்கி மேலும் பேசியது: விவசாயிகள் வயல்களில் பூச்சி மருந்து அடிக்கும்போது பாதுகாப்பாக இருக்கவும், சுவாசத்தின் வழியாக பூச்சி மருந்தின் வீரியம் தாக்காத வகையில் முகமூடி, கண் கண்ணாடி, தொப்பி, கையுறைகள் மற்றும் பூச்சி மருந்து கலந்த இயந்திரத்தை முதுகில் அணியும்போது மருந்து கசிந்து உடைக்குள் செல்வதை தடுக்கும் வகையில் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட சட்டை, பேண்ட் உள்ளிட்ட உடை மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த உடை மிகவும் பாதுகாப்பானதாகவும், பூச்சி மருந்தின் தாக்கம் விவசாயிகளை பாதிக்காத வகையிலும், மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது என்றார் அவர்.
தொடர்ந்து, விவசாயிகள் பாதுகாப்பான உடைகளை அணிந்து பூச்சி மருந்து தெளிப்பது குறித்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே. வரதராஜன், வேளாண்மை இணை இயக்குநர் சுதர்சன், கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக் கழகப் பேராசிரியர் சங்கர்கணேஷ், வேளாண்மை அலுவலர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com