பெரம்பலூரில் உலமாக்கள் உறுப்பினர் சேர்க்கை முகாம்

பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலமாக்கள் உறுப்பினர் சேர்க்கை முகாமில் 70-க்கும் மேற்பட்டோருக்கு புதுப்பிக்கப்பட்ட, புதிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலமாக்கள் உறுப்பினர் சேர்க்கை முகாமில் 70-க்கும் மேற்பட்டோருக்கு புதுப்பிக்கப்பட்ட, புதிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
தமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை மூலம் உலமாக்கள் மற்றும் இதரப் பணியாளர்கள் நலவாரியம் மூலமாக பள்ளிவாசல், தர்கா, மதரஸாக்களில் பணிபுரியும் 18 முதல் 60 வயதுவரை உள்ளவர்களுக்கு வாரியத்தில் உறுப்பினர்களாகப் பதிவு செய்து, அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
கல்வி, திருமணம், மகப்பேறு, இயற்கை மரணம் மற்றும் விபத்து நிவாரணம் என பல்வேறு பிரிவுகளின் உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அடையாள அட்டை பெற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்தவர்களுக்குப் புதுப்பித்தும், புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெர்றது.
சிறப்பு முகாமில் 70-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தங்களது உலாமாக்கள் அட்டைகளைப் புதுப்பித்து, புதிய அடையாள அட்டைகளை பெற்றனர். புதிய உலமாக்களுக்கான விண்ணப்பப் படிவமும் அளிக்கப்பட்டு பெறப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பாண்டியன் உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com