சிறுபான்மையினர் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர் டாம்கோ கடன் திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்றார் ஆட்சியர் வே. சாந்தா.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர் டாம்கோ கடன் திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்றார் ஆட்சியர் வே. சாந்தா.
சிறுபான்மையினத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜெயின் மற்றும் பார்சி இனத்தவர் பொருளாதார ரீதியில் மேம்பாடு அடையும் வகையில் பல்வேறு கடனுதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களின் மூலம் கடனுதவி பெற பெற்றோர், பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ. 1.03 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 18 வயது நிறைவடையாதவராக இருக்க வேண்டும். அதிக பட்சம் ரூ. 20 லட்சம் வரை கடன் வழங்கப்படும். கடன் தொகையை வட்டியுடன் அதிகபட்சம் 60 மாத தவணைகளில் செலுத்த வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகங்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பத்தை இலவசமாகப் பெற்று, வங்கி கோரும் இதர ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுலவகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com