தேசிய கூடைப்பந்து போட்டி: பெரம்பலூர் பள்ளி மாணவர் தேர்வு

தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு, பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக்.பள்ளி மாணவர் ஆர். ரித்தேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு, பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக்.பள்ளி மாணவர் ஆர். ரித்தேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியப் பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில், தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு தமிழக கூடைப்பந்து அணிகள் சார்பில் பங்கேற்பதற்கான தேர்வுப் போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டது. இதில், திருச்சி, சென்னை, காஞ்சிபுரம், சேலம், மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், விழுப்புரம் உள்ளிட்ட 8 மண்டல அளவில் 17 வயதுக்குள்பட்ட மாணவர்கள் தேர்வுப் போட்டிகளில் பங்கேற்றனர். இதில், 48 பேர் மாநில அளவிலான தேர்வுப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தொடர்ந்து, திருநெல்வேலியில் மாநில அளவிலான கூடைப்பந்து வீரர்கள் தேர்வுப்போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் ஆர். ரித்தேஸ் உள்பட 12 பேர் தமிழக கூடைப்பந்து அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழக அணி சார்பில் டிச. 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் மாணவன் ஆர். ரித்தேஷ் பங்கேற்க உள்ளார்.
இதையடுத்து, தமிழக அணி சார்பில் பங்கேற்கும் கூடைப்பந்து வீரர் ஆர். ரித்தேஷை, பள்ளி தாளாளர் ஆர். ரவிச்சந்திரன், கூடுதல் முதல்வர் ஆர். அங்கயற்கன்னி, முதல்வர் எஸ். சேகர், உடற்கல்வி இயக்குநர் ஆர். பிரேம்நாத், உடல்கல்வி ஆசிரியர் எஸ். அகிலாதேவி ஆகியோர் திங்கள்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com