தீத்தடுப்பு, டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுக் கூட்டம்

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே, பள்ளிக் கல்வித்துறை சார்பில் இளையோர் செஞ்சிலுவைச் சங்க மாணவர்களுக்கான தீத்தடுப்பு, மீட்புப் பணி

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே, பள்ளிக் கல்வித்துறை சார்பில் இளையோர் செஞ்சிலுவைச் சங்க மாணவர்களுக்கான தீத்தடுப்பு, மீட்புப் பணி மற்றும் டெங்கு காய்ச்சல் சம்பந்தமான விழிப்புணர்வுக் கூட்டம்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து முதன்மைக் கல்வி அலுவலர் தி. அருள்மொழிதேவி பேசியது:
மாணவர்கள் பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட வேண்டும். பட்டாசு வெடித்து கொண்டாடும் போது, அருகில் ஒரு வாளியில் தண்ணீர் வைத்துக்கொண்டு பெரியவர்கள் துணையோடு கொண்டாட வேண்டும். இதை, ஒவ்வொரு ஆசிரியர்களும் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். கடுமையான தலைவலி, கண்களுக்கு பின்னால் வலி, கடுமையான தசை மற்றும் மூட்டுவலி, குமட்டல், வாந்தி, தோலில் அரிப்பு, சொறி ஆகியவை டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறியாகும். இந்த அறிகுறி மாணவர்களுக்கு இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். மாணவர்களை ஆசிரியர்கள் நாள்தோறும் கண்காணித்து, இந்த அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார் அவர்.
மாவட்டக் கல்வி அலுவலர் வி. பிருதிவிராசன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் (பொ) பெ. அம்பிகாபதி ஆகியோர் தீத்தடுப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்தும், மாவட்ட கன்வீனர் வெ. ராதாகிருஷ்ணன் நிகழாண்டுக்கான செயல் திட்டங்கள் குறித்தும் பேசினர்.
முன்னதாக, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கே. முருகனுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட இணைக்கன்வீனர்கள் த. மாயகிருஷ்ணன், ரா. ராஜமாணிக்கம், மண்டல பொறுப்பாளர்கள் கே. கிருஷ்ணராஜ், எம். ஜோதிவேல், வி. ராஜா, எம். நவிராஜ், ஆர். துரை, ஏ.எஸ். ராஜேந்திரன், ஆர். செல்வகுமார் உள்பட உயர்நிலை, மேல்நிலை, நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 68 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com