டெங்கு கொசு ஒழிப்பு தினம்: பெரம்பலூரில் உறுதிமொழி ஏற்பு

பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பிரதி வியாழக்கிழமை தோறும் டெங்கு கொசு ஒழிப்பு தினம் அனுசரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுடன் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ப. சம்பத்குமார் பேசியது:
ஒவ்வொரு வியாழக்கிழமையிலும் பள்ளி, கல்லூரிகளில் மணவர்களுக்கு டெங்கு மற்றும் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டி,  பாத்திரங்களை 3 நாள்களுக்கு ஒருமுறை பிளிச்சிங் பவுடர் கொண்டு தேய்த்து சுத்தம் செய்து, உலரவைத்து பிறகு தண்ணீரை நிரப்ப வேண்டும்.
வீடு தேடிவரும் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு களப்பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, 3 வட்டார மருத்துவமனைகள், 30 படுக்கை கொண்ட வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு காய்ச்சல் இருந்தால், பெரம்பலூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்மோகன் (9443807011), ஆலத்தூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கலியமூர்த்தி (9442926800), வேப்பந்தட்டை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கங்காதரன் (9894766770), வேப்பூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோவன் (9994567121), மாவட்ட மலேரியா அலுவலர் சுப்ரமணியன் (9443517431), மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு மருத்துவர் அரவிந்த் (8903877848) ஆகியோரை தொடர்புகொள்ளலாம் என்றார் அவர்.
இதில், வட்டார மருத்துவ அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com