டெங்கு: டயர் தொழிற்சாலையில் ஆட்சியர் ஆய்வு

டெங்கு கொசு பரவுவதை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, நாரணமங்கலம் ஊராட்சி மற்றும் தனியார்

டெங்கு கொசு பரவுவதை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, நாரணமங்கலம் ஊராட்சி மற்றும் தனியார் டயர் தொழிற்சாலையில் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நாரணமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், இரும்பு பொருள்களில் தேங்கியிருந்த தண்ணீர்,  கொட்டப்பட்டிருந்த கழிவுப்பொருள்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். ஏ.டி.எஸ் கொசுக்கள் வளர்வதற்கு ஏதுவான சூழலை உருவாக்கக் கூடாது.
ஓரிரு நாள்களுக்குள் அனைத்துப் பகுதிகளும் சுத்தம் செய்யப்பட்டு, நீர் தேங்காத வகையில் இருக்க வேண்டும். சுத்தம் செய்யப்பட்ட பிறகு, அதற்கான புகைப்பட ஆதாரங்களுடனான அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆலை நிர்வாகத்துக்கு உத்தரவிட்ட ஆட்சியர், இனிவரும் நாள்களில் தண்ணீர் தேங்கும் வகையில் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
தொடர்ந்து, நாரணமங்கலம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், வீடு, வீடாகச் சென்று பொதுமக்களிடம் டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, சுகாதாரம் குறித்து அறிவுரை வழங்கினார்.
ஆய்வின்போது, கோட்டாட்சியர் கதிரேசன், சுகாதாரத் துறை துணை இயக்குநர் சம்பத், நகராட்சி ஆணையர் முரளி, வட்டாட்சியர்கள் பாலகிருஷ்ணன், சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com