அசல் ஓட்டுநர் உரிமம் முறையை கைவிடக் கோரிஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஓட்டுநர்கள், அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை கைவிடக்கோரி, பெரம்பலூர் மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் (சி.ஐ.டி.யு) சங்கத்தினர் வேலைநிறுத்தம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்

ஓட்டுநர்கள், அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை கைவிடக்கோரி, பெரம்பலூர் மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் (சி.ஐ.டி.யு) சங்கத்தினர் வேலைநிறுத்தம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்டத் தலைவர் பி. பிரகாஷ் தலைமை வகித்தார். சங்க பொறுப்பாளர்கள் எஸ் . மல்லீஸ்குமார், எஸ். சிவசங்கர், எம். செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், அசல் ஓட்டுநர் உரிமம் கோரும் முறையை கைவிட வேண்டும். ஓட்டுநர்கள் நகல் வைத்திருப்பதை அனுமதிக்க வேண்டும். காப்பீட்டுக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவி அனிதா உயிரிழப்புக்கு காரணமான நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சி.ஐ.டி.யு மாவட்ட செயலர் ஆர். அழகர்சாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இதில், ஆட்டோ ஓட்டுநர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் சி. சண்முகம், மாவட்ட செயலர் ரெங்கநாதன், சி.ஐ.டி.யு பொறுப்பாளர்கள் பி. முத்துசாமி, எ. கணேசன், ஆர். ராஜகுமாரன், எஸ். அகஸ்டின், பி. ரெங்கராஜ், கே. மணிமேகலை, கல்யாணி, பி. அன்பழகன் உள்பட பலர் பங்கேற்றனர். ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினரின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோ, 3 ப்ளஸ் 1 ஆட்டோ வகைகளை சேர்ந்த ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com