ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் போராட்டம்பெரம்பலூரில் 205 பேர் கைது

கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே 3-வது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்த 205 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை

கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே 3-வது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்த 205 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
ஜியோ ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கி. ஆளவந்தார், ஜாக்டோ ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் கணேசன், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் அருள்ஜோதி ஆகியோர் தலைமை வகித்தனர்.
காலை 11 மணி முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் மகராஜன்,
மாவட்ட செயலர் பாரதிவளவன், மத்திய செயற்குழு உறுப்பினர் குமரி அனந்தன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் இ. மரியதாஸ், மாவட்டச் செயலர் சா. இளங்கோவன் மற்றும் 90 பெண்கள் உள்பட 205 பேரை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஞான சிவக்குமார் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த அனைவரும் பிற்பகல் 2 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com