'தூய்மையே சேவை' இயக்க உறுதிமொழி ஏற்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், தூய்மையே சேவை இயக்க உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், தூய்மையே சேவை இயக்க உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் உத்தரவுப்படி செப். 15 முதல் அக். 2 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் தூய்மையே சேவை என்ற தலைப்பின் கீழ், தூய்மை இந்தியா திட்டத்தின் சார்பில் அனைத்துப் பகுதிகளிலும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, அரசு அலுவலர்களுடன் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் பா. பாஸ்கரன் பேசியது:
வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார நிலையங்கள், பேருந்து நிலையங்கள், நீர்நிலைகள் மற்றும் இதர பொது இடங்களில் தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். வீடுகளில் இரட்டை உறிஞ்சு குழிகளுடன் கூடிய கழிப்பறைகளைக் கட்டுவதுடன், கழிப்பறைகள் கட்டாதவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அவர்களை கழிப்பறைகள் கட்டச் செய்து, திறந்தவெளியில் மலம்கழிப்பதை தவிர்க்க வேண்டும்.
கழிப்பறையைப் பயன்படுத்துவதுடன், கை, கால்களை சுத்தமாகக் கழுவுதல் மற்றும் இதர சுகாதார பழக்கங்களையும் கடைப்பிடிக்க வேண்டும். மறுசுழற்சி மற்றும் மறு பயன்பாடு என்ற கோட்பாட்டின் படி திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை திட்டத்தை பாதுகாப்பான முறையில் செயல்படுத்த வேண்டும் என்றார் அவர். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மனோகரன், வட்டாட்சியர்கள், வருவாய்த் துறை மற்றும் வளர்ச்சித் துறை அலுவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com