பெரம்பலூர் மாவட்டத்தில் அக். 2 வரை தூய்மைப் பணிகள்

பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அக். 2 ஆம் தேதி வரை தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அக். 2 ஆம் தேதி வரை தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளது:
அனைத்துத் துறை அலுவலர்களும், தங்களது அலுவலகம் மற்றும் பிரதான பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், ஞாயிற்றுக்கிழமை (செப். 17) சேவை தினமாக கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதையொட்டி, மாவட்ட ஆட்சியர் தூய்மை ரதத்தை கொடியசைத்து தொடக்கி வைக்கிறார். மேலும், மாவட்டத்தில் கழிப்பறைகள் இல்லாத பகுதிகளை தேர்ந்தெடுத்து, கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து தூய்மைப் பணி மேற்கொள்வது என்ற தலைப்பில், மாவட்டத்தின் பிரதான பகுதிகளில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும். குறிப்பாக, கல்வி நிலையங்கள், மாணவர் விடுதிகள், அரசு அலுவலகங்கள், பொது இடங்கள், மருத்துவமனைகள் ஆகிய பகுதிகளில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும். 25, 26 ஆம் தேதி முதல் அக். 1 ஆம் தேதி வரை சுற்றுலாத் தலங்கள், கோயில்கள், மசூதிகள் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மைப் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி பிறந்த நாளான அக். 2 ஆம் தேதி தூய்மையே சேவை பிரசார சேவை நிறைவடையும். இந்த தூய்மை திட்டத்தை செயல்படுத்தும் போது, பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பை அளிக்கும் வகையில், அனைவரும் இப்பணியில் ஈடுபடவேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com