குறைகேட்பு நாள் கூட்டத்தில் 216 மனுக்கள் அளிப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
 இந்த கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 216 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்துக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தலைமை வகித்தார். 
கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப் பட்டா என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொது மக்களிடமிருந்து 216 மனுக்கள் பெறப்பட்டன. 
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் மனோகரன், மகளிர் திட்ட இயக்குநர் தேவநாதன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.                                                  
அரியலூர்...:  அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 221 கோரிக்கை மனுக்களை ஆட்சியர் மு. விஜயலட்சுமி பெற்றுக்கொண்டார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சே. தனசேகரன், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர்அ. பூங்கோதை,  மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அ. அனந்தநாராயணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்  ஆர். பாலாஜி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.                                
 அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டங்களில் பங்கேற்ற ஆட்சியர்கள், 
பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து, குறித்த காலத்துக்குள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு பதில் அளிக்குமாறு அறிவுறுத்தினார்.        

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com