மே 8- இல் முற்றுகைப் போராட்டம்: ஜாக்டோ- ஜியோ முடிவு

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மே 8-ல் சென்னை கோட்டையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மே 8-ல் சென்னை கோட்டையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் கடலூர், பெரம்பலூர், விழுப்புரம் மண்டலம் சார்பில் சென்னை கோட்டையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பாக, பெரம்பலூர் மாவட்டத்தில் புதன்கிழமை விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளரும், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலருமான இரா. தாஸ் மேலும் கூறியது: 
தமிழகத்தில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு 11 மண்டலங்களாக பிரித்து, மக்கள் மற்றும் அரசு அலுவலர்களிடம் கோரிக்கை தொடர்பான பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறோம். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 7-வது ஊதியக் குழு பரிந்துரைப்படி 21 மாத நிலுவையை வழங்க வேண்டும். அனைத்துப் பிரிவு ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் உள்ள பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறோம். 
 ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், அதிகாரிகள் நிலுவைத் தொகைகளை பெற்றுள்ளனர். ஆனால், தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நிலுவைத் தொகையை வழங்கவில்லை. எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினரை அழைத்துப் பேச முன்வரவில்லை. தமிழக அரசு எங்களை அழைத்துப் பேச வேண்டும். இல்லையென்றால், தமிழக முழுவதும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களை ஒன்றிணைத்து மே 8 ஆம் தேதி கோட்டையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com