கண் சிகிச்சை உதவியாளர் பணியிடங்கள்: பதிவு மூப்பு பட்டியலை சரிபார்க்க அழைப்பு

கண் சிகிச்சை உதவியாளர் பணியிடங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள உத்தேச பதிவு மூப்பு

கண் சிகிச்சை உதவியாளர் பணியிடங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள உத்தேச பதிவு மூப்பு பட்டியலை சரிபார்த்துக் கொள்ள பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பதிவுதாரர்களுக்கு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:மருத்துவப் பணியாளர் தேர்வுவாரியத் தலைவரால் அறிவிக்கப்பட்ட 43 கண் சிகிச்சை உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு உத்தேச பதிவு மூப்புப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்ச்சியுடன் கண் சிகிச்சை உதவியாளர்பயிற்சி முடித்த சான்றிதழும் வைத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :  2018, ஜூலை 1 ஆம் தேதியின்படி  ஆதிதிராவிடர், அருந்ததியினர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) ஆகியோருக்கு 18 முதல் 57 வயதுக்குள்ளும், பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 30 வயதுக்குள்ளும், பொதுப்பிரிவில் முன்னுரிமையற்றவர்கள் 2013, பிப்ரவரி 28 ஆம் தேதி வரை பதிவு செய்தவர்களும்,  முன்னுரிமை உடையவர்கள் 2018, நவம்பர் 12 ஆம் தேதி வரை பதிவு செய்தவர்களும் பரிந்துரைக்கப்பட உள்ளனர்.
இப்பணிக்கு தகுதியுள்ளவர்கள் தங்களது வேலைவாய்ப்பு அடையாள அட்டை, சாதிச்சான்று, குடும்ப அடையாள அட்டை மற்றும் அனைத்து கல்விச் சான்றுகளுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை நேரில் சென்று சரிபார்த்துக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com