கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திங்கள்கிழமை முதல் கிராம நிர்வாக அ

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திங்கள்கிழமை முதல் கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவருக்கும், ஒரே அரசாணை மூலம் மாவட்ட மாறுதலை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும். பணியிடங்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். அலுவலகங்களில் அடிப்படை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கணினி வழிச் சான்றிதழ்கள், இணையதள பணிகளுக்கான செலவினத் தொகை மற்றும் வசதிகள் செய்து தர வேண்டும்
 என்பன உள்ளிட்ட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் நவ.28 ஆம் தேதி முதல் ஆன்லைனில் சான்றிதழ் பதிவு செய்யும் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, டிசம்பர் 5,6 தேதிகளில் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் காத்திருப்புப் போராட்டம் மேற்கொண்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர், திங்கள்கிழமை முதல் பணிகளைப் புறக்கணித்து தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பெ. கார்த்திகேயன், ஆலத்தூரில்
 மாவட்டத் தலைவர் ரா.ராஜா, வேப்பந்தட்டையில் மாவட்டச் செயலர் மா. ரெங்கராஜ், குன்னத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ந. அகிலன் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.  இப்போராட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் 90 கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர். இதனால் கிராம நிர்வாக அலுவலர்களின் பரிந்துரையின் பேரில் வருவாய்த்துறை சார்பில் பல்வேறு சான்றிதழ்கள் வழங்கும் பணி உள்ளிட்ட அன்றாட பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com