பாலமுருகன் கோயிலில் தைப்பூச விழா

பெரம்பலூர் பாலமுருகன் கோயிலில் தைப்பூசத்தையொட்டி சப்பர தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 

பெரம்பலூர் பாலமுருகன் கோயிலில் தைப்பூசத்தையொட்டி சப்பர தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
பெரம்பலூர்- எளம்பலூர் சாலையில் உள்ள பாலமுருகன் கோயிலில் 38-வது ஆண்டு தைப்பச விழாவை முன்னிட்டு, கணபதி ஹோமம், மூலவருக்கு சிறப்பு அபிசேகம், மகா தீபராதனை நடத்தப்பட்டது.  பூஜைகளை கோயில் அர்ச்சகர் ரமேஷ் தலைமையிலான சிவாச்சாரியார் குழுவினர் நடத்தினர்.
தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட உற்சவர் பாலமுருகன் சப்பரத்தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
இதில், பெரம்பலூர் மேட்டுத்தெரு, எளம்பலூர் சாலை, வடக்குமாதவி சாலை, பாரதிதாசன் நகர், மதனகோபாலபுரம், புதிய மதனகோபாலபுரம், முத்துநகர், கம்பன்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதி பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, கோயில் மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. 
பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் உள்ள சுப்ரமணியசாமி சன்னதியிலும், புகர் பேருந்து நிலையம் அருகேயுள்ள முத்துகுமாரசுவாமி கோயிலிலும் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. 
பெரம்பலூரை அருகே குரும்பலூரில் உள்ள தர்மசம்வர்த்தனி சமேத பஞ்சநதீஸ்வரர் கோயிலில் சண்முக சுப்ரமணியர், வள்ளி தேவசேனா சிலைகளுக்கு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள், மகாதீபாராதனை நடைபெற்றது.  திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 
தைப்பூச விழாவை தொடர்ந்து சிவாலயங்களிலும், முருகன் கோயில்களிலும் சந்திரகிரகணம் மாலையில் வந்ததால் நடை சாத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com