பிளஸ் 2  தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கலாம்

மேல்நிலை 2 ஆம் ஆண்டு தனித்தேர்வர்கள் பொதுத் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கலாம்

மேல்நிலை 2 ஆம் ஆண்டு தனித்தேர்வர்கள் பொதுத் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் முதன்மைக் கல்வி அலுவலர் தி. அருள்மொழிதேவி. 
பெரம்பலூர் மாவட்டத்தில், நடைபெறவுள்ள மார்ச், ஏப்ரல்- 2018 மேல்நிலை 2 ஆம் ஆண்டு பொதுத்தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உள்பட) செவ்வாய்க்கிழமை (பிப். 13) முதல் w‌w‌w.‌d‌g‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n  என்னும் இணையதளத்தின் மூலம் நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கலாம். மேற்காணும் இணையதள முகவரிக்கு சென்று  விண்ணப்ப எண், பிறந்த தேதியை பதிவு செய்தால், அவர்களுடைய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும்.  அதைப் பதிவிறக்கிக் கொள்ளலாம். மொழிப்பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி (தமிழ்) பாடத்தில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தனித்தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்துகொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி தேர்வெழுத அனுமதிக்கமாட்டார்கள். பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை மேற்கண்ட எனும் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com