வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

கடந்த 2009 ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலைக் கண்டித்து, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை நீதிமன்றப் பணி

கடந்த 2009 ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலைக் கண்டித்து, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு பிப். 19 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் தமிழகப் போலீஸார் அத்துமீறி நுழைந்து வழக்குரைஞர்கள், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் பலர் பலத்த காயமடைந்தனர். நீதிமன்றப் பொருள்கள், நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் ஆகியவற்றை சேதப்படுத்தியதோடு, நீதிபதிகளையும் தாக்கினர். எனவே, அந்த நாளை வழக்குரைஞர்கள் ஆண்டுதோறும் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர்.
அதன்படி, பெரம்பலூரில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட பார் அசோசியேசன் தலைவர் இ. வள்ளுவன் நம்பி, பெரம்பலூர் மாவட்ட அட்வகேட் அசோசியேசன் தலைவர் சுந்தர்ராஜன் ஆகியோர் தலைமையில், சுமார் 300-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால், பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிமன்றப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com