சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம்

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விக்டரி அரிமா சங்கம் ஆகியவற்றில் பொங்கல் விழா வெள்ளி, சனிக்கிழமைகளில் கொண்டாடப்பட்டது.

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விக்டரி அரிமா சங்கம் ஆகியவற்றில் பொங்கல் விழா வெள்ளி, சனிக்கிழமைகளில் கொண்டாடப்பட்டது.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் தனலட்சுமி சீனிவாசன் இருபாலர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு, கல்வி நிறுவனங்களின் செயலர் நீல்ராஜ் முன்னிலை வகித்தார். விழாவுக்கு தலைமை வகித்து, தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன், இறைவனுக்கு பூஜை செய்து, பசுக்களுக்கு பொங்கல் ஊட்டினார். தொடர்ந்து, தமிழர்களின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நடனங்கள், இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில், மலேசியா ரோசா குருப் ஆப் ஹோட்டல்ஸ் மற்றும் கிரேஸ் கப் எண்டர்பிரைசஸ் இயக்குநர் எஸ். பாலகிருஷ்ணன், மருத்துவக் கல்லூரி டீன் ரெங்கநாதன், கண்காணிப்பாளர் திருநீலகண்டன், சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் நா. வெற்றிவேலன், கல்வியியல் கல்லூரி முதல்வர் சாந்தகுமாரி, துணை முதல்வர் ஜி. ரவி மற்றும் துறைத் தலைவர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விக்டரி அரிமா சங்கம்:
பெரம்பலூர் அருகேயுள்ள நாரணமங்கலம் கிராமத்தில், விக்டரி அரிமா சங்கம் சார்பில் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். சாசனத் தலைவர் கோபிநாத் முன்னிலை வகித்தார். விழாவையொட்டி, பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு முன்னாள் துணைத் தலைவர் ஆர். சிவானந்தம் பரிசு வழங்கி பாராட்டினார். மாவட்டத் தலைவர்கள் மு. இமயவரம்பன், ரவி, செயலர்கள் குணசீலன், குமார், பொருளாளர் தினேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com