பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தின் பெயரை மாற்றி அரசாணை வெளியீடு

தமிழக முதல்வர் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு வளாகத்துக்கு பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு வளாகம் என பெயர் சூட்டப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழக முதல்வர் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு வளாகத்துக்கு பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு வளாகம் என பெயர் சூட்டப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 
இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த வளாகம் சுமார் 10 ஏக்கர் நில பரப்புடையது. இதில், 400 மீ. தடகள ஓடு பாதை, கால்பந்து மைதானம், கையுந்து பந்து, கைப்பந்து மைதானம், மின்னொளியுடன் கூடிய  டென்னிஸ் மைதானம், கோ-கோ மைதானம், 
இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம், கூடைப்பந்து மைதானம், குளிர்சாதன வசதியுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடம், பார்வையாளர்கள் அமரக்கூடிய இருபுறமும் உள்ள கேலரி, விழா மேடை, கட்டப்பட்டு வரும் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம், மகளிர் விளையாட்டு விடுதி உள்ளிட்ட வசதிகள் உள்ளது. 
பெரம்பலூரில் கடந்த 5.8.2017- இல் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர்  எடப்பாடி கே. பழனிசாமி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்துக்கு பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு வளாகம் என்று பெயர் சூட்டப்படும் என அறிவித்தார்.  அதன்படி, பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தின் பெயர் மாற்றப்பட்டு அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  
எனவே, இனிவரும் காலங்களில் மாவட்ட விளையாட்டு வளாகத்தை, பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு வளாகம் என்று அழைக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com