காணும் பொங்கல் கொண்டாட்டம்!

பொங்கல் விழாவின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை காணும் பொங்கலை, பெரம்பலூர்  மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா மற்றும்

பொங்கல் விழாவின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை காணும் பொங்கலை, பெரம்பலூர்  மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் உற்சாகமாகக் கொண்டாடினர்.
கடந்த 13 ஆம் தேதி போகியுடன் தொடங்கிய பொங்கல் பண்டிகையின் இறுதியாக செவ்வாய்க்கிழமை காணும் பொங்கம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பெரம்பலூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அறிவியல் பூங்கா, விசுவக்குடி நீர்த்தேக்கம், சாத்தனூர் கல்மரப் பூங்கா, ரஞ்சன்குடி கோட்டை, வெள்ளாற்றின் கரையோரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதலே தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடம் கூடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, உணவுப் பண்டங்களை பரிமாறிக்கொண்டனர்.  
மேலும், பெரம்பலூர் நகர்ப்புறம் மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் காணும் பொங்கலையொட்டி கோலப் போட்டிகள், வழக்கு மரம் ஏறுதல், பட்டிமன்றம், பானை உடைத்தல், கயிறு இழுக்கும் போட்டி, இசை நாற்காலி, பாட்டுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு கலைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. 
காணும் பொங்கலையொட்டி அசம்பாவித சம்பங்கள் நடைபெறாமல் இருக்க  ஊர்க்காவல் மற்றும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com