இன்று முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு சிறப்பு உடனடித் தேர்வு

பிளஸ் 1 மாணவர்களுக்கான சிறப்பு உடனடித் தேர்வு வியாழக்கிழமை (ஜூலை 5) முதல் நடைபெறுகிறது.

பிளஸ் 1 மாணவர்களுக்கான சிறப்பு உடனடித் தேர்வு வியாழக்கிழமை (ஜூலை 5) முதல் நடைபெறுகிறது.
இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் தி. அருள்மொழிதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 1 அரசு பொதுத்தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெறாத, தேர்வுக்கு வராத மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு உடனடித் தேர்வுகள் ஜூன், ஜூலையில் நடத்தப்படுகிறது.
பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு உடனடித் தேர்வுகள் பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் உள்ள பனிமலர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை தொடங்கி வரும் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அதன்படி, வியாழக்கிழமை தமிழ் முதல் தாள், 6 ஆம் தேதி தமிழ் 2 ஆம் தாள், 7 ஆம் தேதி ஆங்கிலம் முதல் தாள், 9 ஆம் தேதி ஆங்கிலம் 2 ஆம் தாள், 10 ஆம் தேதி வேதியியல், கணக்குப் பதிவியல், கணக்குப் பதிவியல் தியரி, புவியியல், 11 ஆம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், நீயூட்டிரின் அன்ட் யடாடீஸ், நர்சிங், டெக்ஸ்டைல் அன்ட் டிரஸ் டிசைனிங், விவசாயம், உணவு மேலாண்மை அன்ட் குழந்தை நலம் ஆகிய தேர்வுகள் நடைபெறுகிறது.
12 ஆம் தேதி தகவல் ஆங்கிலம், எத்தீஸ், கணிணி அறிவியல், பையோ கெமிஸ்டிரி, அட்வான்ஸ்டு தமிழ், ஹோம்சையின்ஸ், புள்ளியியல், அரசியல் அறிவியல், 13 ஆம் தேதி உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம், பொது மெக்னிஸ் அன்ட் அப்லைன்ஸ் தியரி, மேலாண்மை பிரின்ஸ்சிபல், மேலாண்மை பிரின்ஸ்சிபல் டெக்னிக்யூஸ் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும் தேர்வுகள் நடைபெறுகிறது.
இத் தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி, பகல் 12.45 மணிக்கு நிறைவடைகிறது. தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டுடன் குறித்த நேரத்துக்கு முன்னதாக பள்ளி வளாகத்துக்குள் ஆஜராக வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com