மாரியம்மன் கோயில்களில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

பெரம்பலூர் அருகே மாரியம்மன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

பெரம்பலூர் அருகே மாரியம்மன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
பெரம்பலூர் அருகே பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள மாரியம்மன் கோயில் திருவிழா ஜூன் 3ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, அம்மனுக்கு காப்புக் கட்டுதல், திருவீதி உலா நடைபெற்றது. 
விழாவின் முக்கிய நிகழ்வான, திருத்தேர் வடம் பிடித்தல் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. கிராமத்தின் பிரதான வீதிகள் வழியாக சென்ற தேர் மாலையில் நிலையை வந்தடைந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மஞ்சள் நீராட்டு, அம்மனுக்கு தாலாட்டு விடையாற்றுதலுடன் திருவிழா புதன்கிழமை நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கோயில் திருவிழாக் குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர். 
அதேபோல, செங்குணத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழா ஜூன் 3ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. ஜூன் 15-இல் குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து, அக்னிச் சட்டி எடுத்தும், அலகு குத்தி, தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். முக்கிய நிகழ்வாக, தேரோட்டத்தில் பெரம்பலூர் மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். பிரதான வீதிகள் வழியாக சென்ற தேர் நிலையை வந்தடைந்தது. 
மஞ்சள் நீராட்டு, குடிவிடுதலுடன் விழா புதன்கிழமை நிறைவடைகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com