"குழந்தைகளுக்கு கலாசாரத்தை கற்றுத்தர வேண்டும்'

பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு கலாசாரத்தை கற்றுத்தர வேண்டும் என்றார் ஆட்சியர் வே. சாந்தா. 

பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு கலாசாரத்தை கற்றுத்தர வேண்டும் என்றார் ஆட்சியர் வே. சாந்தா. 
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூக நலத்துறை சார்பில், தனலட்சுமிகு சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
கருத்தரங்குக்கு தலைமை வகித்த ஆட்சியர் மேலும் பேசியது: 
பெண்கள் தங்களை அனைத்து துறைகளிலும் முன்னிலைப்படுத்திக்கொள்ள புதிய விஷயங்களை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். அப்போதுதான் வாழ்க்கையில் தெளிவு பிறக்கும். 
தங்கள் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு நமது கலாசாரம் மற்றும் பெரியவர்களை மதிக்கும் பண்பாடு ஆகியவற்றைக் கற்றுத்தர வேண்டும்.   இதன்மூலம் வருங்கால சமுதாயம் ஆண், பெண் எனும் பேதமின்றி, அனைத்து துறைகளிலும் இருவரும் சரிசமமாக பணியாற்றி வெற்றி பெறுவதற்கு பேருதவியாக இருக்கும். மேலும், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக முன்னாள் முதலமைச்சர் பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். எனவே, இத்திட்டங்களை முறையாக பயன்படுத்திக்கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.  
தொடர்ந்து, சமுதாயத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளான குடும்ப வன்முறை, வரதட்சிணை, பணிபுரியும் இடங்களில் ஏற்படும் பாலியல் வன்முறை, குழந்தை திருமணம், முதியோர் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் இருந்து பெண்கள் தங்களை சட்டப்பூர்வமாக காத்துக்கொள்ளும் வகையில் சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரசாரத்தை தொடக்கி வைத்த ஆட்சியர், மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு நிமிடத்துக்குள் இருசக்கர வாகனத்தின் மூலம் அதிகளவில் 8 போட்டு காண்பித்த மாணவிகளுக்கு பரிசுகள் அளித்தார் சாந்தா. 
நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் இரா. தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்), ஆர்.டி. ராமச்சந்திரன் (குன்னம்), ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், மகளிர் திட்ட அலுவலர் தேவநாதன், மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) பூங்கொடி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி, கல்வி நிறுவனங்களின் இயக்குநர் பூபதி, கல்லூரி முதல்வர் ஹெச்.எஸ். அப்ரோஸ் உள்பட கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com