தேனூர் கிராமத்தை ஊராட்சியாக தரம் உயர்த்தக் கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே துங்கபுரம் ஊராட்சிக்குள்பட்ட தேனூர் கிராமத்தை ஊராட்சியாக தரம் உயர்த்தக்கோரி அப்பகுதி பொதுமக்கள்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே துங்கபுரம் ஊராட்சிக்குள்பட்ட தேனூர் கிராமத்தை ஊராட்சியாக தரம் உயர்த்தக்கோரி அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியர் வே. சாந்தாவிடம் திங்கள்கிழமை மனு  அளித்தனர். 
இதுகுறித்து,  பொதுமக்கள் அளித்த மனு:
குன்னம் வட்டம், துங்கபுரம் ஊராட்சியானது தேனூர், கோவில்பாளையம், கிளியப்பட்டு, அண்ணா நகர் ஆகிய 6 கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. இந்த ஊராட்சியில், சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதனால், மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், மின் விளக்கு உள்ளிட்ட வசதிகளை ஊராட்சி நிர்வாகத்தால் முறையாக மேற்கொள்ள முடியவில்லை. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் தேனூர் கிராமத்தை ஊராட்சியாக தரம் உயர்த்தக்கோரி பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளோம். எனவே, தேனூர் கிராமத்தை ஊராட்சியாக தரம் உயர்த்தி அடிப்படை வசதிகளை எளிதாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.  
கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க வலியுறுத்தல்:
தேனூர் கிராமத்தில் அரசு விதிமுறைகளை மீறி கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், அனுமதியின்றி மது பாட்டிகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 
இதுகுறித்து காவல்துறையினரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கள்ளச்சாராயம் காய்ச்சுவதையும், சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனையும் தடுத்து, அந்த செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள்  சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com