பெரம்பலூரில் மது ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி.  

மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி.  
மதுவினால் ஏற்படும் தீமைகள், மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து வளர் இளம் பருவத்தினர் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இப் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி.   பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவிகள் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, மதுவுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பினர்.   வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி காமராஜர் வளைவு, சங்குப்பேட்டை, ரோவர் வளைவு, புகர் பேருந்து நிலையம் வழியாக சென்று நகராட்சி அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. இதில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமன், வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் உள்பட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com