எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் பாறைகள் தகர்ப்பதைத் தடுக்க வேண்டும்

எளம்பலூரில் உள்ள பிரம்மரிஷி மலையில் பாறைகள் தகர்க்கப்படுவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சன்மார்க்க சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். 

எளம்பலூரில் உள்ள பிரம்மரிஷி மலையில் பாறைகள் தகர்க்கப்படுவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சன்மார்க்க சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். 
பெரம்பலூரில் மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் சார்பில் 
திங்கள்கிழமை நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். கெளரவத் தலைவர் வழக்குரைஞர் பிரசன்னம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சங்க செயல்பாடுகள், பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 
கூட்டத்தில், சித்தர்கள் வாசம் செய்யும் எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் பாறைகளை தகர்த்து, கல், ஜிப்ஸ் அரைத்தல் உள்ளிட்ட பணிகளால் அங்கு வாழும் உயிரினங்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே, பிரம்மரிஷி மலையில் பாறைகள் தகர்ப்பதைத் தடுத்து மலையை பாதுகாக்க வேண்டும், பக்தர்களின் வசதிக்காக இருந்த குடிநீர் வசதியை தடுத்த அதிகாரிகளின் செயலைக் கண்டிப்பது, குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரக்கோருவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பொது செயலாளர் நாராயணசாமி வரவேற்றார். துணைத் தலைவர் முருகேசன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com