குழந்தை உரிமைகள், பாதுகாப்பு திறன் வளர்ப்பு பயிற்சி

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர்களுக்கு குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு திறன் வளர்ப்பு பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது. 

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர்களுக்கு குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு திறன் வளர்ப்பு பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது. 
ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர் வட்டாரங்களைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்,  கிராம உதவியாளர்களுக்கு குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.  
பயிற்சிக்கு தலைமை வகித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, குழந்தைகள் எவ்வித துன்புறுத்தல்களும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்வதற்குத் தேவையான சூழலை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து, குழந்தை நலக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் பாபு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கொடி ஆகியோர் குழந்தை உரிமைகள், பாதுகாப்பு, குழந்தை திருமணத்தை தடுத்தல், பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல், கிராம அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்கள் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவது தொடர்பாக பயிற்சி அளித்தனர். 
நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர் (பொ) சேதுராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com