வன விலங்குகளால் பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை

வன விலங்குகளால் நிலக்கடலை, நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் வன விலங்குகளால் சேதப்படுத்தப்படுவதால், பெரம்பலூர்

வன விலங்குகளால் நிலக்கடலை, நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் வன விலங்குகளால் சேதப்படுத்தப்படுவதால், பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம், வெண்பாவூர், சித்தளி, பேரளி, அன்னமங்கம், அரசலூர், பாடாலூர் உள்பட பல இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வனக் காப்புக்காடுகள் உள்ளன. இங்கு, மயில், மான், குரங்கு, காட்டுப்பன்றி, மயில் முயல் உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கின்றன. இந்த விலங்குகள் அவ்வப்போது, உணவுக்காகவும், குடிநீருக்காகவும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்கும், நெடுஞ்சாலைக்கும் வருகின்றன. 
பெரும்பாலும் வனப் பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களை இரவு நேரங்களில் விலங்குகள் சேதப்படுத்தி வருகின்றன. குறிப்பாக, மயில், குரங்கு, காட்டுப் பன்றிகளால் விவசாய நிலங்கள் பெரிதும் சேதமடைந்து வருகின்றன. தற்போது, பெரம்பலூர் மாவட்டத்தில் நிலக்கடலை அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளதால், அவற்றை காட்டுப் பன்றிகள் கூட்டம், கூட்டமாக சென்று சேதப்படுத்தி வருகிறது. 
வன விலங்குகளைக் கட்டுப்படுத்தக் கோரி விவசாயிகள் குறைதீர் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர், வனத்துறை அலுவலர்களிடம் பலமுறை புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. 
இதுகுறித்து,  பாடாலூரைச் சேர்ந்த விவசாயி சா. மாணிக்கவாசகம் கூறியது: 
சின்ன வெங்காயம் அறுவடைப் பணி முடிந்தவுடன் நிலக்கடலை சாகுபடி செய்து வருகிறேன். 100 முதல் 120 நாள் பயிரான நிலக்கடலை சாகுபடி செய்ய சுமார் ரூ. 20 ஆயிரம் வரை செலவாகும். நிலக்கடலை சாகுபடியில் வேலைப்பளு அதிகம் என்பதால் கூலி ஆள்கள் கிடைப்பது சிரமம். இருப்பினும், பெரும்பாலான விவசாயிகள் நிலக்கடலை சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 
தை மாதம் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலையில் தற்போது காய் பிடித்து முதிர்ச்சி அடையும் தருணம். இந்நிலையில், பாடாலூர் வனப்பகுதியில் இருந்து இரவு நேரங்களில் வரும் காட்டுப் பன்றிகள் நிலக்கடலை பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதைக் கட்டுப்படுத்த மின் வேலிகளும் அமைக்க முடியாது. மருந்து தெளித்தாலும் இதர பறவைகள் உயிரிழக்க நேரிடும். இதனால், பாயிர்களை பாதுகாக்க முடியாமல் பெரிதும் சிரப்பட்டு வருகிறோம். 
வன விலங்குகளையும், விவசாய நிலங்களையும் பாதுதாக்க வேண்டுமானால், வனப்பகுதியை சுற்றி தரமான சூரிய ஒளி மின் வேலிகள் அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
தவறும் பட்சத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். ஏற்கெனவே, சின்ன வெங்காயம், பருத்தி, மக்காச்சோளம், மரவள்ளிக் கிழங்கு உள்ளிட்ட விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம். தற்போது, நிலக்கடலை பயிர்களையும் வன விலங்குகள் சேதப்படுத்தி வருவதால் மிகுந்த வேதனைக்கு ஆளாகி உள்ளோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com