பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலைய மேற்பார்வையாளர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலைய மேற்பார்வையாளர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்புகள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பயிற்சி வகுப்பைத் தொடக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா பேசியது:  தேர்தல் அலுவலர்கள் மொபைல் செயலி மூலம் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இந்த செயலியை பயன்படுத்த அலுவலர்களுக்கு தனித்தனி பயன்பாட்டு குறியீடு மற்றும் கடவுச் சொல் வழங்கப்படும். விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தவுடன், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இணையதளம் வழியாகவே விண்ணப்பங்களைப் பரிசீலித்து, இறுதி செய்து வாக்காளர் அட்டையாள அட்டை வழங்கிட ஒப்புதல் அளிக்கப்படும்.  பயிற்சி பெறும் அலுவலர்கள் தங்கள் பகுதிக்குள்பட்ட வாக்குசாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும் என்றார் அவர். 
தொடர்ந்து, மாவட்ட அளவிலான முதன்மை பயிற்றுநர்கள்  சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் எஸ். மனோகரன், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் என். ஷாஜகான் ஆகியோர் பயிற்சி அளித்தனர். 
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, நகராட்சி ஆணையர் வினோத், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் சிவா, வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com